உலகின் பருமனான எகிப்திய பெண்ணிற்கு இந்தியாவில் சிகிச்சை

உலகின் மிக பருமனான பெண்ணாக கருதப்பட்ட எகிப்தை சேர்ந்த பெண்ணைக் காப்பாற்றும் நம்பிக்கையில் இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.

இமான் அகமத் அப் எல் ஆட்டி

பட மூலாதாரம், DR MUFFAZAL LAKDAWALA

படக்குறிப்பு, இமான் அகமத் அப் எல் ஆட்டி

இமான் அகமத் அப் எல் ஆட்டி, என்னும் அவரின் எடை சுமார் 500 கிலோ ஆகும்.

அவருக்கு சிறுவயதில் தொடங்கிய மருத்துவ நிலை காரணமாக அவர் அசைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்; மேலும் சனிக்கிழமை இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு அவர் இருபது வருடங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

அவரின் எடையை குறைக்கும் முந்தைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்