You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க-சீன அதிபர்கள் தொலைபேசி உரையாடல்; மறுபுறம் தென் சீன கடலில் பரபரப்பு
அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி, ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா ஆதரிப்பதாக டிரம்ப் அறிவித்திருப்பதில் மகிழ்ச்சியடைந்துள்ள வேளையில், தென் சீனக் கடற்பரப்பில் இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தன்னுடைய முந்தைய அறிவிப்புகளுக்கு மாறாக, சீனாவோடு தூதரக உறவு சிக்கல்களை தவிர்த்துவிட்டு, தைவான் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடத்திய முதல் தொலைபேசி உரையாடலின்போது இந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்பாக, தைவானை சீனாவின் பகுதியாக குறிப்பிடுகின்ற "ஒரே சீனா" கொள்கையில் இருந்து அவர் பின்வாங்கலாம் என்று கூறியிருந்தார்.
சுமார் 40 ஆண்டுகளாக அமெரிக்காக இந்த கொள்கையை ஏற்று செயல்பட்டு வந்த நிலையில், டிரம்பின் கருத்துக்களுக்கு சீனா கோபமாக பதிலளித்திருந்தது.
தைவான் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குகின்ற சமீபத்திய கருத்தை சீனா வரவேற்றுள்ளது.
தென் சீன கடலில் பரபரப்பு
இந்நிலையில், தென் சீன கடற்பரப்பிற்கு மேலே தன்னுடைய ராணுவ விமானம் பறந்தபோது, சீன கண்காணிப்பு விமானம் 300 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து வந்ததாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
ஸகார்போரஃப் ஷொல் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பவளப்பாறைகள் மற்றும் கற்பாறைகளுக்கு அருகில் நிகழ்ந்த இந்த சம்பவம் பாதுகாப்பற்ற ஒன்றாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் விவரித்திருக்கிறார்.
தங்களுடைய விமானி பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.
தென் சீன கடல் பகுதியில் சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையில் தவறான புரிதல்கள் ஏற்பட வாயப்புள்ளதை இந்த சம்பவம் கோடிட்டுக்காட்டுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்