தென் கொரிய அதிபர் மீதான முறைகேடு குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன வாரிசு கைதாகிறாரா?

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை தொடர்புடைய மோசடி ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பெரு வணிக நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் வாரிசை கைது செய்வது பற்றி எடுக்கும் முடிவை திங்கட்கிழமை வரை தாமதிக்கலாம் என்று முடிவுவெடுத்துள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபரின் தோழி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஜே ஒய். லீ நன்கொடைகள் வழங்குவதை அங்கீகரித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபரின் தோழி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஜே ஒய். லீ நன்கொடைகள் வழங்குவதை அங்கீகரித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கையால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாம்சங் நிறுவனத்தின் இரு இணை நிறுவனங்களை ஒன்றிணைக்க அரசின் அதிகாரப்பூர்வ ஆதரவை பெறுவதற்காக அதிபரின் தோழி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஜே ஒய். லீ நன்கொடைகள் வழங்குவதை அங்கீகரித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்ட விசாரணையின் போது, ஜே ஒய். லீ இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்