தென் கொரிய அதிபர் பதவியை குறிவைக்கும் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தான் பிறந்த தென் கொரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

தென் கொரிய அதிபர் தேர்தலை குறிவைக்கும் பான் கீ மூன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் கொரிய அதிபர் தேர்தலை குறிவைக்கும் பான் கீ மூன்

டிசம்பர் மாத இறுதியில் உலகின் உயர்நிலை தூதராக பான் கி மூனின் பதவிர்காலம் முடிவடைய உள்ளது.

ஐ.நாவின் பொது செயலாளராக பான் கி மூன் கடைசியாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு தென் கொரியா செல்ல இருப்பதாகவும், அங்கு தன்னால் இயன்ற சேவைகளை நாட்டுக்கு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் கொரிய அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும்.

எனினும், தற்போதையை அதிபர் பார்க் குன் ஹை, தனது தோழியின் நிதி முறைகேடுகளுக்கு உதவியதாக, அவரை பதவியிறக்க நாடாளுமன்றம் வாக்களித்திருப்பதால் இரு மாதங்களில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.