தென் கொரியா: அதிபர் மீதான குற்ற விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை மீது விசாரணை நடத்தி பதவியிறக்கும் நடைமுறை ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

பட மூலாதாரம், Handout
பார்க் குன் ஹையின் கட்சியை சேர்ந்த டஜன் கணக்கான உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
எனினும், அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று தான் அவரை அலுவலகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கும் நிலையில், பார்க் அம்மையாரை பதவியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள இது நிர்ப்பந்திக்கும்.
தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டிய தன் தோழி ஒருவருக்கு தேவைக்கு அதிகமாக அரசியல் செல்வாக்கை பார்க் குன் ஹை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
வாக்கெடுப்பிற்கு பின்னர், நாட்டில் அரசியல் குழப்பம் விளைவித்ததற்காக மன்னிப்பு கோரினார் பார்க் குன் ஹை. ஆனால், அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தென் கொரிய பிரதமர் உவாங் கியோயான் இடைக்கால அதிபராக பதவி வகிப்பார்.








