உயிர் காக்கும் சிகிச்சை பெறாமல் போகும் ஹச்ஐவி மற்றும் எயிட்ஸ் இருப்பதை அறியாதோர்

ஹச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோயாளிகளில் ஏறக்குறைய பாதிபேர், தாங்கள் இத்தகைய நோய் தொற்றுக்களை பெற்றிருப்பதை அறியாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஹச்ஐவி மற்றும் எயிட்ஸ்

பட மூலாதாரம், AFP

இதனால் இவர்கள் உயிர் காக்கும் சிகிச்சை முறைகளை பெறாமல் போகிறார்கள்.

ஹச்ஐவி தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட 80 சதவீத மக்கள் இதனை ஏற்படுத்தும் நச்சுயிரியை தடுப்பதற்கான சிகிச்சையை பெறுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஹச்ஐவி மற்றும் எயிட்ஸ்

பட மூலாதாரம், SPL

ஆனால் சுமார் 14 மிலியன் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாது என்பதும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலை தொடர்வது, இந்த நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன.

ஹச்ஐவி மற்றும் எயிட்ஸ்

பட மூலாதாரம், SPL

இதனை வீட்டில் வைத்தே அறிவதற்கான சுய பரிசோதனை கருவிகளை உலக நாடுகளின் அரசுகள் உருவாக்கி, அவை எளிதாகவும், மலிவாகவும் கிடைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கிரெட் சென் கேட்டு கொண்டுள்ளார்.