ஐந்தாண்டுகள் கடற்கொள்ளையரின் பிடியில் இருந்த 26 மாலுமிகள் விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையரால் சுமார் ஐந்தாண்டுகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 26 மாலுமிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பிணைக் கைதிகள் தொடர்பாக பேரம் பேசுபவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடற்கொள்ளையர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எப்வி நாஹாம் 3 கப்பல் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீசெல்சுக்கு தெற்கிலுள்ள கடற்பரப்பில் கடத்தப்பட்டது

2000 ஆம் ஆண்டுகளின் பாதியிலிருந்து சோமாலிய கடற்கொள்ளையரால் பிடித்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரில் இவர்கள் கடைசியானவர்கள் என்று நம்பப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிசெல்சுக்கு தெற்கிலுள்ள கடற்பரப்பில் இவர்களுடைய எப்வி நாஹாம் 3 என்ற கப்பல் கடத்தப்பட்டது.

படகுகள்
படக்குறிப்பு, சோமாலிய கடற்கொள்ளையரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கானவர்கள்

அந்த கப்பல் மூழ்குவது வரை, அதுவும், அதிலிருந்த ஊழியர்களும் சோமாலிய கடல் எல்லைக்கு அப்பால் வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் ஆசியாவின் கிழக்கிலுள்ள சில நாடுகளை சேர்ந்த இந்த பிணக் கைதிகள், கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு, கடினமான சூழ்நிலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சமீபத்திய ஆண்டுகளில் சோமாலியாவின் கடல் எல்லைக்கு அப்பால் நடத்தப்படும் கடற்கொள்ளை கணிசமாகக் குறைந்திருக்கிறது.