கருச்சிதைவு சட்டங்களில் சீர்திருத்தம் - விவாதிக்கிறது அயர்லாந்து
நாட்டின் மிக கடுமையான கருச்சிதைவு சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது பற்றி கலந்துரையாட அயர்லாந்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடிமக்களின் பேரவை முதல்முறையாக கூடுகிறது.

1983 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கசப்பானதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட, ஐரோப்பாவிலே கடுமையான கருச்சிதைவு சட்டங்கள் கொண்ட நாடாக அயர்லாந்து விளங்குகிறது.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை அந்த சட்டம் ஏற்று, உத்தரவாதம் அளிக்கிறது.
பரவலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 99 அயர்லாந்து ஆண்களும், பெண்களும் இந்த குடிமக்கள் பேரவையில் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரால் இவர்கள் மேற்பார்வை செய்யப்படுவர். இவர்களின் பரிந்துரைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.








