படங்களில்: பனி படர்ந்த ரஷ்யா

ரஷ்யாவிலும் சுற்றுவட்ட நாடுகளிலும் நிலவும் கடுமையான பனிக்காலத்தை பிபிசி ரஷ்ய நேயர்கள் தமது காமெராக்களில் படம்பித்து அனுப்பிய சில புகைப்படங்களை இங்கே காணலாம்.

ரஷ்யாவிலும் அதன் சுற்றுவட்ட நாடுகளிலும் தற்போது நிலவும் கடுமையான குளிரை பிபிசியின் ரஷ்ய நேயர்கள் படம்பிடித்து அனுப்பியுள்ளார்கள். பெர்த்யான்ஸிக் என்ற ஊர் எப்படிக் காட்சியளிக்கிறது என்பதை இப்படம் காட்டுகிறது.
படக்குறிப்பு, ரஷ்யாவிலும் அதன் சுற்றுவட்ட நாடுகளிலும் தற்போது நிலவும் கடுமையான குளிரை பிபிசியின் ரஷ்ய நேயர்கள் படம்பிடித்து அனுப்பியுள்ளார்கள். பெர்த்யான்ஸிக் என்ற ஊர் எப்படிக் காட்சியளிக்கிறது என்பதை இப்படம் காட்டுகிறது.
இந்த தைரியம் நம்மில் யாருக்கும் வருமா? ஆனால் பனி ஏரிக்குள் குதிப்பதை ரஷ்ய மக்கள் பாரம்பரியமாகவே கொண்டுள்ளனர்.
படக்குறிப்பு, இந்த தைரியம் நம்மில் யாருக்கும் வருமா? ஆனால் பனி ஏரிக்குள் குதிப்பதை ரஷ்ய மக்கள் பாரம்பரியமாகவே கொண்டுள்ளனர்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாமன்னர் பீட்டரின் சிலை குளிரில் உறைந்து கிடக்கிறது.
படக்குறிப்பு, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாமன்னர் பீட்டரின் சிலை குளிரில் உறைந்து கிடக்கிறது.
இது செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள இசக்கியெவ்ஸ்கி தேவாலயம்.
படக்குறிப்பு, இது செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள இசக்கியெவ்ஸ்கி தேவாலயம்.
உறைந்த ஜன்னல் வழியே வெள்ளை ஆடை போர்த்திய ஊர்
படக்குறிப்பு, உறைந்த ஜன்னல் வழியே வெள்ளை ஆடை போர்த்திய ஊர்
உறைந்த முட்கம்பி வேலி.
படக்குறிப்பு, உறைந்த முட்கம்பி வேலி.
மாஸ்கோ குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த இந்த சிட்டுக் குருவி சூரியன் வருகையால் குதூகலம் அடைகிறது.
படக்குறிப்பு, மாஸ்கோ குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த இந்த சிட்டுக் குருவி சூரியன் வருகையால் குதூகலம் அடைகிறது.
உறைந்து காரின் ரேடியேட்டர் கண்விழிக்கிறது.
படக்குறிப்பு, உறைந்து காரின் ரேடியேட்டர் கண்விழிக்கிறது.
கஸக்ஸ்தானில் இயற்கை வரைந்த ஓர் உறைபனிப் பூங்கா.
படக்குறிப்பு, கஸக்ஸ்தானில் இயற்கை வரைந்த ஓர் உறைபனிப் பூங்கா.
லித்துவேனியாவில் பனியும் மூடுபனியும் பூமியை போர்த்தியிருக்க இளஞ்சிபாய் உதிக்கிறான் காலைக் கதிரவன்.
படக்குறிப்பு, லித்துவேனியாவில் பனியும் மூடுபனியும் பூமியை போர்த்தியிருக்க இளஞ்சிபாய் உதிக்கிறான் காலைக் கதிரவன்.
பனியாடையுடுத்திய இலைகள்
படக்குறிப்பு, பனியாடையுடுத்திய இலைகள்
இந்த ரோஜா மலர்க் கொத்து வாட வழியில்லைதானே!
படக்குறிப்பு, இந்த ரோஜா மலர்க் கொத்து வாட வழியில்லைதானே!
ஆறு ஓடினால் படகு ஓடும். ஆறு உறைந்தால் படகு உறங்கத்தானே வேண்டும்.
படக்குறிப்பு, ஆறு ஓடினால் படகு ஓடும். ஆறு உறைந்தால் படகு உறங்கத்தானே வேண்டும்.
ஊசி கொண்டு நெய்யலாம். ஊசிபோன்ற முட்களையே ஒன்றாகத் நெய்துள்ளது உறைபனி.
படக்குறிப்பு, ஊசி கொண்டு நெய்யலாம். ஊசிபோன்ற முட்களையே ஒன்றாகத் நெய்துள்ளது உறைபனி.
இது ஜார்ஜியாவின் நினோத்ஸ்மிண்டாவில் எடுக்கப்பட்ட படம். அவ்வூரும் கடுங்குளிருக்கு தப்பவில்லை.
படக்குறிப்பு, இது ஜார்ஜியாவின் நினோத்ஸ்மிண்டாவில் எடுக்கப்பட்ட படம். அவ்வூரும் கடுங்குளிருக்கு தப்பவில்லை.
ரஷ்யாவின் கோமி குடியரசில் உறைந்த ஓர் ஜன்னலிலிருந்து விரியும் காட்சி.
படக்குறிப்பு, ரஷ்யாவின் கோமி குடியரசில் உறைந்த ஓர் ஜன்னலிலிருந்து விரியும் காட்சி.
யூரல் மலைப் பகுதியில் தற்போது பனிச்சறுக்கு விளையாட பிரச்சினையே இல்லை.
படக்குறிப்பு, யூரல் மலைப் பகுதியில் தற்போது பனிச்சறுக்கு விளையாட பிரச்சினையே இல்லை.
வடக்கு ரஷ்யாவின் அர்க்கங்கெல்ஸ்க் என்ற இடத்தில் உறைந்துபோன சிலுவை.
படக்குறிப்பு, வடக்கு ரஷ்யாவின் அர்க்கங்கெல்ஸ்க் என்ற இடத்தில் உறைந்துபோன சிலுவை.
இந்தப் படம் எடுக்கப்பட்ட குர்ஸ்க் நகரில் -26 பாகை செல்ஷியஸ் வரையான கடும் குளிர் நிலவியது.
படக்குறிப்பு, இந்தப் படம் எடுக்கப்பட்ட குர்ஸ்க் நகரில் -26 பாகை செல்ஷியஸ் வரையான கடும் குளிர் நிலவியது.
பனிக்காலத்தில் காடுகள் புது அழகு பெறுகின்றன.
படக்குறிப்பு, பனிக்காலத்தில் காடுகள் புது அழகு பெறுகின்றன.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகே எடுக்கப்பட்ட ஒரு படம்.
படக்குறிப்பு, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகே எடுக்கப்பட்ட ஒரு படம்.