You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு இயக்குநர் ரஞ்சித் எதிர்ப்பு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறையை மாற்றினால்தான் முறையான தேர்தல் நடக்கும் என்றும், தரமான கதையோடு அரசியல் சொல்வதும் இன்றைய சூழலில் அவசியம் என்றும் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளனார்.
அர்ஜூன் ரெட்டி படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் "நோட்டா" படத்தின் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்ச் சூழலில் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய இளைஞர்கள்தான் எந்தவித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்தவித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள்.
ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் தனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை என்றும், இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது தமது கணிப்பு என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும்போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது.
அத்துடன் ஓர் அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் "நோட்டா" என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதேபோல் இந்தப் படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்