காணொளி: 'நீங்கள் விரும்பியதை தரும் அதிபர்' - இரான் மக்களுக்கு டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட காணொளியில், அமெரிக்கா இரானில் 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை' தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
"நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க பலமுறை முயன்றோம். நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, அவர்களின் ஏவுகணைத் துறையை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலுமாக…அழிக்கப்படும்" என்று டிரம்ப் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "இறுதியாக, பெருமைக்குரிய இரான் மக்களிடம் நான் கூறுவது, நீங்கள் விடுதலை பெறும் நேரம் நெருங்கியுள்ளது. பாதுகாப்பான இடங்களில் இருங்கள்; வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வெளியே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது; எங்கும் குண்டுகள் வீசப்படலாம். எங்கள் நடவடிக்கைகள் முடிந்த பின், உங்கள் அரசை நீங்கள் கைப்பற்றுங்கள்; அது உங்களுக்கே சொந்தமானதாக இருக்கும். பல தலைமுறைகளுக்கு இது ஒரே வாய்ப்பாக இருக்கலாம்.
பல ஆண்டுகளாக நீங்கள் அமெரிக்காவின் உதவியை கேட்டிருந்தாலும், அது கிடைக்கவில்லை. இன்று நான் செய்யத் தயாராக இருப்பதை எந்த அமெரிக்க அதிபரும் முன்பு செய்ய முன்வரவில்லை. இப்போது நீங்கள் விரும்பியதை வழங்கும் ஒரு அதிபர் உங்களிடம் உள்ளார்; அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கிறீர்கள் என்பதை பார்க்கலாம். அமெரிக்கா மிகப்பெரிய சக்தி மற்றும் கடுமையான ராணுவ வலிமையுடன் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



