காணொளி: பாகிஸ்தான் தலைமையை பாராட்டிய டிரம்ப்
காணொளி: பாகிஸ்தான் தலைமையை பாராட்டிய டிரம்ப்
பாகிஸ்தான் தலைமையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். அவரிடம் செய்தியாளர் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் இங்கே தரப்பட்டுள்ளன.
கேள்வி: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் போர் நடத்தி வருகிறது. இதில் தலையிடுமாறு அவர்கள் உங்களிடம் கேட்டனரா? யாராவது உங்களை தொடர்புகொண்டனரா?
பதில்: நிச்சயமாக நான் தலையிட முடியும். பாகிஸ்தானுடன் எனக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது, மிகவும் நல்ல உறவு.
சிறந்த பிரதமர் (ஷெபாஸ் ஷெரிஃப்) உள்ளார், சிறந்த ராணுவ தளபதி உள்ளார், நல்ல தலைமை உள்ளது.
நான் மிகவும் மதிக்கும் தலைவர்களில் இருவர் அங்கே உள்ளனர்; பாகிஸ்தான் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கருதுகிறேன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



