காணொளி: பிடிஎஸ் ரசிகர்களால் 'டைகர்' என அழைக்கப்படும் கிம் டேஹியுங்- யார் இவர்?
பிடிஎஸ் (BTS) ரசிகர்களால் 'வி' (V), 'டே டே' (Tae Tae), 'டைகர்' (Tiger) என அன்புடன் அழைக்கப்படும் கிம் டேஹியுங்கின் (Kim Taehyung) பிறந்தநாள் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ:
பிடிஎஸ் குழுவின் பாடகரான இவரது மேடைப் பெயர் 'வி' (V). அவரே தேர்வு செய்த இந்தப் பெயரைச் சூட்டுவதற்கு முன்னதாக, 'லெக்ஸ்' மற்றும் 'சிக்ஸ்' ஆகிய பெயர்களை அவர் பரிசீலித்தார். இறுதியில் வெற்றி (Victory) என்பதைக் குறிக்கும் வகையில் 'வி' என்ற பெயரைத் தேர்வு செய்ததாக அவரே தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற கலைஞரான 'வி' இந்தக் குழுவில் இணைந்த நிகழ்வு மிகவும் சுவாரசியமானது. தனது நண்பரின் 'பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்' நேர்முகத் தேர்விற்காக வந்திருந்த இவரை அந்நிறுவனம் தற்செயலாகத் தேர்வு செய்தது. ஆனால், அந்தத் தேர்வில் அவரது நண்பர் தேர்வாகவில்லை; கிம் டேஹியுங் மட்டுமே தேர்வானார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



