போபியா: நாயைக் கண்டு சிலர் அஞ்சுவது ஏன்? இதைப் போக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மருத்துவர் ராஜேந்திர பார்வே, மனநல மருத்துவர்
- பதவி, சுகதா ஆச்சார்யா, முழுநேர பயிற்சியாளர்
சுதிர் ஒரு சிறந்த தொழிலதிபராக உள்ளார். 32 வயதிலேயே பெயர், புகழ், பணம் ஆகியவற்றை சம்பாதித்தார். தனது பொருட்களை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. ஆனால், அதனை அடைவதற்கு பெரிய சிக்கல் அவர் முன் இருந்தது.
கூட்டத்தில் பேசுவதற்கு சிதிர் மிகவும் பயந்தார். பலர் நிறைந்துள்ள சபையில் தனது எண்ணங்களையும் விளக்கங்களையும் வைப்பதற்கு அவர் தடுமாறினார். அந்த நேரத்தில் அவரது வாய் வறண்டுவிடும், இதயத்துடிப்பு அதிகமாகி கைகள் நடுக்க ஆரம்பித்தன.
இதன் காரணமாக அவரின் முன்னேற்றம் தடைபட்டது. தன் இயல்பினால் தன் கனவுகள் நிறைவேறவில்லையே என்ற வருத்தத்தில், எரிச்சல் அடைந்து வேலையிலிருந்து திசை திருப்பினார். தன் மன வேதனையை யாரிடமும் அவரால் சொல்ல முடியவில்லை.
மீனாவும் சுதீரைப் போல் தான். குடும்ப தலைவியான மீனா, தனது பக்கத்து வீட்டு பெண்மணியுடன் கடைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தான் இல்லாமல் மீனா வெளியே எங்கும் செல்வதில்லை என்பதை பக்கத்து வீட்டு பெண்மணி ஒருநாள் உணர்ந்தார். மீனா தன்னை சார்ந்தே இருப்பதால், தன்னால் வீட்டு வேலைகளை செய்ய முடிவதில்லை என்பதையும் அவர் புரிந்துகொண்டு இது குறித்து மீனாவிடமே கூறியுள்ளார்.
இதைக் கேட்ட மீனாவுக்கு கோபம், சோகம் போன்றவை ஒருசேர ஏற்பட்டது. வீட்டிலேயே இருக்க தொடங்கினார். மீனாவுக்கு உதவ அவரது மற்ற தோழிகள் விரும்பினர். ஆனால், அவர் ஏன் சோகமாக இருக்கிறார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மூன்றாவது சம்பவம் சுஜித்தை பற்றியது. மழைக்காலம் தொடங்கும்போது சுஜித் மிகவும் அமைதியற்றவராக, ஒருவித படபடப்போடு இருப்பதை அவரின் மனைவி கவனித்துள்ளார். கனமழை பெய்துவிடுமோ என்ற கேள்வி சுஜித்தின் மனதில் தினமும் எழுகிறது. அப்படி பெய்தால் வெளியே செல்லமாட்டேன் என்று அவர் முடிவு செய்துகொள்கிறார்.
வானத்தில் உள்ள கருமேகங்களை வெறித்து பார்த்தபடியே அவர் இருக்கிறார். அவருக்கு என்ன பிரச்னை என்பது அவரது மனைவிக்கு புரியவில்லை.
நான்காவது சம்பவம் நம்பிக்கை தொடர்பானது. தனது வாழ்நாளில் பொது போக்குவரத்தில் பயணிப்பதையே பின்பற்றி வந்த விஸ்வாஸ் கடந்த 6 மாதங்களாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தனது சொந்த வாகனத்தில் பயணிக்க தொடங்கியுள்ளார். இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று குடும்பத்தினருக்கு தெரியவில்லை.
இந்த நான்கு உதாரணங்களும் சொல்ல வருவது என்ன? நிச்சயம் உங்கள் மனதில் இந்த கேள்வி எழும். அதற்கான பதில் மிகவும் எளிமையானது. அவர்கள் அனைவரும் போபியாவால்(phobia) பாதிக்கப்பட்டுள்ளனர். தெனாலிராமன் படத்தில் வரும் நாயகன் கமலைப் போல எதைக் கண்டாலும் பயப்படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள.

பட மூலாதாரம், Getty Images
போபியா என்றால் என்ன?
'போபியா' என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான 'போபோஸ்' என்பதிலிருந்து வந்தது. பயப்படுதல் என்பது இதன் பொருள். ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே போபியா என்று கூறுகின்றனர்.
அகோராபோபியா என்பது அதிகமாக காணப்படுகிறது. அதாவது, மக்கள் நிறைந்த பொது இடத்தில் அஞ்சுவதை இது குறிக்கிறது.
பயத்தின் முக்கிய வகை அகோராபோபியா ஆகும். அதாவது சந்தையில் ஒரு இடைவெளி அல்லது இடைவெளியைப் பற்றி அஞ்சுவது, இதற்கு மேலே கண்ட மைனா தான் உதாரணம். சுதீருக்கு பொதுமக்கள் நிறைந்த இடத்தில் இருப்பது, பேசுவதன் மீதான அச்சமாகும்.
விஸ்வாஸுக்கோ பொது போக்குவரத்தில் பயணம் செய்வதில் அச்சம் இருக்கிறது.
அதே போல் சிலருக்கு ரத்தம், உயரமான இடங்கள், கிணறு, ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகள், மூடிய இடங்கள் (அறைகள், திரையரங்கம் போன்றவற்றின் இருட்டு) போன்றவற்றின் மீது அச்சம் இருக்கும். ஒருசிலருக்கு பொது கழிவறையை பயன்படுத்துவதற்கு அச்சம் இருக்கும். மேலும், பாம்பு, கரப்பான்பூச்சி, பல்லி, பூக்கள், நாய், பூனை, போன்றவற்றை பார்த்தால் அதீத அச்சம் ஏற்படலாம். இது எல்லாமே போபியாவின் வெளிப்பாடுதான்.
ஒரு தீவிரமான, விவரிக்க முடியாத பயம் மிகவும் தாங்க முடியாததாக மாறும், அந்த பொருள், இடம் மற்றும் சூழலில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று தோன்றும்.

பட மூலாதாரம், Getty Images
நாம் எவ்வளவு தீவிரமாக பயத்தை உணர்ந்தாலும், நாம் பயப்படக் கூடாது என்று தெரிந்தாலும்கூட நாம் ஒருபோதும் விலகிவிடுவதில்லை. இதன் காரணமாக தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. இது அதீத மனச்சோர்வை ஏற்படுத்தி வாழ்க்கையை சீரழிக்கிறது.
பொதுவாக போபியா உள்ளவர்கள் விசித்திரமானவர்களாகவும், பயந்தவர்களாகவும் குழந்தைத்தனமாகவும் சிறிய விசயங்களுக்கு கூட வம்பு பிடிப்பவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் போபியா என்பது மனநலம் சார்ந்தது. அதற்கு தீர்வு உள்ளது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் நமது சமூகத்தில் போபியா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
பெரும்பாலும் போபியாக்கள் சிறிய வயதின் நினைவுகள் பயம் கலந்த உணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
விஸ்வாஸ் ஒருமுறை ரயிலில் பயணிக்கும் போது அசிடிட்டி ஏற்பட்டு அசௌகரியமாக உணர்ந்தார். அதன் பின்னர் அவர் பொது போக்குவரத்தை தவிர்க்க தொடங்கினார்.
மீனாவுக்கு இதுபோன்று எதுவும் நடந்ததாக நினைவில்லை. சுஜித்துக்கோ மழைக்காலம் வரும் போதெல்லாம் மும்பையில் ஒருமுறை மழைக்காலத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு நினைவுக்கு வருகிறது.
போபியாக்கள் பொதுவாக மரபியல் சார்ந்தது அல்ல என்றாலும் குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு பதற்றம் தொடர்பான பாதிப்புகள் இருக்கக் கூடும்.

பட மூலாதாரம், Getty Images
பயத்தின் உண்மையான அனுபவம், அந்த சூழலின் நிலை, நிகழ்வுகள், பொருள்கள் ஆகியவை மன ரீதியாக தொடர்புகொண்டுள்ளன. உங்களை அறியாமலேயே அச்சத்தின் தாக்குதலை நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள். அந்த சூழலில் உங்களை அச்சமூட்டக் கூடிய நிகழ்வோ, பொருளோ உங்களை சுற்றியே இருக்கக்கூடும். இது கிளாசிக்கல் கண்டிஷனிங் என்று அழைக்கப்படுகிறது.
உளவியல் சிகிச்சைகள், ஹிப்னோதெரபி, சுய-ஹிப்னாஸின் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் போபியாவில் இருந்து மீண்டு வர முடியும். மேலும், நவீன நரம்பியல் ஆராய்ச்சி ஃபோபியாஸில் காரணமான உயிர் வேதியியல் இணைப்பை நிரூபித்துள்ளது.
இத்தகைய அதிநவீன உயிரியல் ஆராய்ச்சியின் காரணமாக, போபியாக்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்
முழு உணர்வின் உதவியுடன், மனதில் எழும் பயத்தின் தன்மையை உடனடியாகப் புரிந்து கொள்வதும், சரியான சுவாசத்தின் உதவியுடன் பயத்தின் அலை மறைந்து போவது பற்றிய தெளிவான விழிப்புணர்வும் ஏற்படுகிறது. மேலும் இதன் மூலம் அச்சத்தால் அவதிப்படுபவர்களுக்கு தன்னம்பிக்கையும் தானாகவே அதிகரிக்கும்.
போபியாக்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை அவற்றில் பல வகைகள் உள்ளன. அதேநேரத்தில், அவற்றுக்கு திறன் வாய்ந்த உளவியல், மருந்தியல் மற்றும் நினைவாற்றல் சிகிச்சைகள் உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












