24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்

காணொளிக் குறிப்பு, 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட ஆயுதமேந்திய குழுவின் தலைவர்கள்
24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்

ஜூலை 31ம் தேதி அன்று ஹெஸ்பொலா தளபதி ஃபவுத் ஷுக்கர், ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே அடுத்தடுத்து வான்வழி தாக்குதல் மூலம் வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.

ஃபவுத் ஷுக்கர், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் இதனை ஹெஸ்பொலா இன்னும் உறுதி செய்யவில்லை.

இரானில் புதிய அதிபர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு சென்ற இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை இஸ்ரேல்.

இந்த இரண்டு ஆயுதமேந்திய, இரானால் ஆதரவளிக்கப்பட்டு வந்த தலைவர்கள் கொல்லப்பட்டது மத்திய கிழக்காசிய நாடுகளில் பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 27ம் தேதி அன்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றில் நடைபெற்ற தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்த இரண்டு கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் தலைவர்கள் 24 மணிநேரத்தில் கொல்லப்பட்ட விவகாரம்
படக்குறிப்பு, ஃபவுத் ஷுக்கர் (இடது), இஸ்மாயில் ஹனியே (வலது)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)