காணொளி: 'ஆபரேஷன் ஹாக்ஐ' - ஐஎஸ் இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஐஎஸ் இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில் சுமார் 35க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக பிபிசியின் செய்தி கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த தாக்குதல் "ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்கின்" (Operation Hawkeye) ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 அன்று சிரியாவில் அமெரிக்க படைகள்மீது ஐஎஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், எங்கள் போர் வீரர்களை நீங்கள் தாக்கினால் உலகின் எந்த மூலையிலும் உங்களை கண்டுபிடித்து கொல்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



