காணொளி: குமட்டலைக் குறைக்க இஞ்சி உதவுமா?

காணொளிக் குறிப்பு, குமட்டலைக் குறைக்க இஞ்சி உதவுமா?
காணொளி: குமட்டலைக் குறைக்க இஞ்சி உதவுமா?

இஞ்சி... இது குமட்டல் உட்பட பல நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு காரமான பொருளாக கருதப்படுகிறது. இஞ்சி உண்மையிலேயே மனிதர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.

பல ஆய்வுகள் இஞ்சி பலருக்கு குமட்டல் அறிகுறிகளைக் குறைப்பதாக கூறுகின்றன. பிரிட்டன் தேசிய சுகாதார சேவையும் குமட்டலுக்கு இஞ்சி கலந்த தேநீரைக் குடிக்குமாறு பரிந்துரைக்கிறது. ஆனால் இஞ்சி எப்படி இதைச் செய்கிறது?

"இதற்குக் காரணம் அதன் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள்தான். இது செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அதன் மூலம் அசௌகரியத்தை போக்கி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது" என்று உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவியல் சங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஆன்னா டேனியல்ஸ் கூறுகிறார்.

இஞ்சி குமட்டலுக்கு உதவுவது மட்டுமின்றி, பிற உடல்நலப் பிரச்னைகளிலும் பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா?

உதாரணமாக, அழற்சியைப் போக்குவது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது போன்றவற்றை அது செய்கிறதா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு