ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா? பிணவறை முன்பு ஏக்கத்துடன் காத்திருக்கும் உறவினர்கள்
ஒடிசா ரயில் விபத்தால், சடலங்களுக்கு நடுவில் தங்களது அன்புக்குரியவர்களை தேட வேண்டிய அவலத்தில் உள்ளவர்களின் நிலை இது. கடைசியாக ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என நம்பிக்கையுடன் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
சடலங்களின் புகைப்படங்கள் ஹாலின் மறுபுறத்தில் புரொஜக்டர் மூலம் சுவரில் காட்டப்படுகின்றன. தங்களது அன்புக்குரியவர்கள் உடல்கள் அதில் இருக்கிறதா என்பதை அறிய மக்கள் கண் இமைக்காமல் அந்த ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சில புகைப்படங்கள் அடையாளம் காணுவதற்காக மேசையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கே பாலாசோரில் தான் முதலில் சடலங்கள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், புகைப்படம் மட்டும் இங்கிருக்கின்றன.
நிறைய பேர் மிகவும் தொலைவான இடங்களில் இருந்து இங்கே வந்திருக்கிறார்கள். தமது உறவுகளின் உடல்களை எடுத்துச் செல்ல காத்திருக்கிறார்கள். சாதாரண மக்கள், என் ஜிஓக்கள், அரசு அதிகாரிகள் எல்லாருமே இங்குவரும் நபர்களுக்கு உதவுவதில் முனைப்புடன் இருக்கிறார்கள். ஆனால், இந்த பெருஞ்சோகத்தில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் தமது வாழ்நாளில் இந்த வலியை மறப்பது கடினம்தான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









