பிபிசி நட்சத்திர வீரர் விருது பெற்ற துளசிமதி முருகேசன் கூறியது என்ன?
தமிழ்நாட்டை சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பிபிசி நட்சத்திர வீரர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றுக் கொண்ட பிறகு பிபிசி தமிழிடம் பேசிய துளசிமதி முருகேசன்,"தமிழ்நாட்டில் இருந்து வந்து பிபிசியின் நட்சத்திர வீராங்கனை விருதைப் பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் பெண் விளையாட்டு வீராங்களின் சாதனைகளை அங்கீகரித்து அவர்களை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக பிபிசி ஐந்தாவது முறையாக இந்த விருதை வழங்குவது அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும். குறிப்பாக பாராலிம்பிக் விளையாட்டு வீராங்கனைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளித்துள்ளனர். என்னைப் போன்ற மாற்றுத் திறன் கொண்ட வீராங்கனைகளும் துணிச்சலாக வெளியே வந்து சாதிக்க வேண்டும்." என்று கூறினார்.
கூடுதல் விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



