நேபாளத்தில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 150ஐ தாண்டியது

காணொளிக் குறிப்பு, நேபாளத்தில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 150ஐ தாண்டியது
நேபாளத்தில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 150ஐ தாண்டியது

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150-ஐயும் தாண்டியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிபிசி நேபாளி சேவையின்படி, வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் மேற்குப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜாஜர்கோட் மருத்துவமனை காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகராட்சி மேயர் ரபி கேசி கூறுகையில், மக்கள் இன்னும் அச்சத்தின் காரணமாக வீடுகளுக்கு வெளியே தங்கியுள்ளனர். பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், மண்ணால் ஆன நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிவிட்டன என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாள பிரதமர் Pushpa Kamal Dahal நேரில் சென்று பார்வையிட்டதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

நேபாள நிலநடுக்கம்

பட மூலாதாரம், RSS(RASHTRIYA SAMACHAR SAMITI/NEWS AGENCY

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)