காணொளி: டிரம்ப் ஏன் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி பற்றி பேசுவதில்லை?
உலகில் எந்த நாட்டை விடவும் அதிகப்படியான எண்ணெய்யை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. எண்ணெய் குறித்து அதிபர் டிரம்ப் அதிகம் பேசுகிறார். ஆனால் அமெரிக்க எண்ணெய் குறித்து மட்டும் அவர் பேசவில்லை.
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்தபோதிலும், வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் மீது அதிபர் டிரம்ப் காட்டும் ஆர்வம் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
அமெரிக்கா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயில் 80% 'இலகுவான' (Light Sweet) வகையைச் சார்ந்தது. ஆனால், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் 20-ஆம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'கனமான' (Heavy Sour) கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சுத்திகரிப்பு நிலையங்களை மாற்றி அமைக்க பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும் என்பதால், அமெரிக்கா தனது விலை உயர்ந்த இலகுவான எண்ணெயை ஏற்றுமதி செய்துவிட்டு, வெனிசுவேலா போன்ற நாடுகளிடமிருந்து விலை குறைந்த கனமான எண்ணெயை இறக்குமதி செய்வதை ஒரு லாபகரமான உத்தியாகக் கடைப்பிடிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



