காணொளி: இரண்டு வாரங்களைக் கடந்து இரானில் நடைபெறும் போராட்டம்

காணொளிக் குறிப்பு, இரண்டு வாரங்களைக் கடந்து இரானில் நடைபெறும் போராட்டம்
காணொளி: இரண்டு வாரங்களைக் கடந்து இரானில் நடைபெறும் போராட்டம்

இரானில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டு வாரங்களைக் கடந்தும் தொடர்கிறது.

பொருளாதார நெருக்கடியால் இரானில் வெடித்த அரசு எதிர்ப்புப் போராட்டம் தற்போது 186 நகரங்களுக்குப் பரவி, சுமார் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா தாக்கினால் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ மையங்கள் சட்டப்பூர்வ இலக்குகளாகக் கருதப்படும் என இரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டங்களை ஒடுக்க இரான் அரசு இணைய சேவையைத் துண்டித்துள்ள சூழலில், அங்கு ஸ்டார்லிங்க் இணையத்தை வழங்க ஈலோன் மஸ்க்குடன் ஆலோசிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் வீதிகளில் ரத்த ஆறு ஓடுவதாகவும், நூற்றுக்கணக்கான சடலங்கள் குவிந்துள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த எழுச்சி இரான் அரசின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளதாகக் கருதப்படும் நிலையில், சைபர் தாக்குதல் அல்லது கூடுதல் பொருளாதாரத் தடைகள் மூலம் இரானை முடக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு