காணொளி: புதுச்சேரியில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து - பயணிகள் என்ன ஆயினர்?
காணொளி: புதுச்சேரியில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து - பயணிகள் என்ன ஆயினர்?
புதுச்சேரியில் இருந்து 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொள்ளாச்சிக்கு புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து, உடனடியாக பேருந்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள்ளாகவே பேருந்து முழுவதும் எரிந்தது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



