காணொளி: இந்திய பெருங்கடலில் தாக்கப்பட்ட இரான் கப்பல் - நிலவரம் என்ன?
காணொளி: இந்திய பெருங்கடலில் தாக்கப்பட்ட இரான் கப்பல் - நிலவரம் என்ன?
புதன்கிழமை இந்திய பெருங்கடலில் இரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அதனை மூழ்கடித்தது. இந்திய கடற்படையின் விருந்தினராக வந்த ஐஆர்ஐஎஸ் தேனா (IRIS Dena) என்ற போர்க்கப்பல் மீது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி தெரிவித்துள்ளார்.
இதுவரை குறைந்தது 84 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது. காயம் அடைந்த 32 பேர் காலி தேசிய வைத்திய சாலையில் சிகிச்சையில் உள்ளனர். தாக்குதல் நடந்தது முதல் சமீபத்திய நிலவரம் வரையிலான தகவல்களை இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் வழங்குகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



