குஜராத் பெண்களின் வாழ்க்கையை மாற்றிய வெண்டைக்காய்

காணொளிக் குறிப்பு, குஜராத் பெண்களின் வாழ்வை மாற்றிய வெண்டைக்காய் சாகுபடி
குஜராத் பெண்களின் வாழ்க்கையை மாற்றிய வெண்டைக்காய்

குஜராத்தின் தாபி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வை, சமீப காலங்களில் வெண்டைக்காய் சாகுபடி பெருமளவு மாற்றியிருக்கிறது. குறிப்பாக வ்யாரா மற்றும் டோல்வன் தாலுக்கா பகுதிகளைச் சேர்ந்த பெண் விவசாயிகள் இதனால் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.

வெண்டைக்காய் சாகுபடிகளின் மூலம் கிடைக்கும் வருமனாத்தால் இவர்கள் பொருளாதார ரீதியாக, சுதந்திரத்துடன் இயங்கி வருகின்றனர். வெண்டைக்காய் சாகுபடி காலங்களில் இந்த பெண்கள் 10,000ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

வெண்டைக்காய், விவசாயம், இந்தியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: