ஸ்பேனிஷ் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் - எப்படிச் சாத்தியமானது?

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிராவில் ஆசிரியை ஒருவரின் முயற்சியால் ஸ்பேனிஷ் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்
ஸ்பேனிஷ் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் - எப்படிச் சாத்தியமானது?

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள கோன்ஹே புத்ருக் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு ஸ்பேனிஷ் கற்றுத் தருகிறது.

வந்தனா கொரடே என்ற ஆசிரியை ஒருவர் முன் முயற்சி எடுத்து, அவர் முதலில் தான் ஸ்பேனிஷ் கற்றுக் கொண்டு பிறகு மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்.

"எனது நண்பரின் மகள் ஒரு மதிப்பு மிக்க இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறாள். அவள் அங்கே ஃப்ரஞ்ச் கற்கிறாள். குறைந்த வருமானமுள்ள குடும்பங்களில் இருந்து வருவதால் என் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து நான் வருந்தினேன். எனவே அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். திறன்பேசியில் தேடினேன். யூடியூப் வீடியோக்கள், சில செயலிகள், இணைய தளங்களைப் பார்த்தேன்.

நானாக முதலில் ஆங்கிலத்தில் கேட்டு, பிறகு, ஸ்பேனிஷ் உச்சரிப்பைக் கேட்டு குறிப்பெடுத்தேன். முதலில் ஒன்று முதல் 10 வரையிலான எண்களை மாணவர்களுக்கு ஸ்பேனிஷில் சொல்லித்தந்தேன். இப்போது அவர்கள் 100 வரையிலான எண்கள், விலங்குகள், பறவைகள், கிழமைகள், மாதங்கள் ஆகியவற்றை ஸ்பானிஷ் மொழியில் சொல்வார்கள். அடிப்படையான ஸ்பேனிஷ் சொற்றொடர்களையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்" என்கிறார் அந்த ஆசிரியை.

செய்தி& காணொளி : நிதின் நகர்கர்

படத் தொகுப்பு : அரவிந்த் பரேக்கர்

ஸ்பேனிஷ் படிக்கும் மாணவிகள்
படக்குறிப்பு, ஸ்பேனிஷ் படிக்கும் மாணவிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: