பாட்டி முதல் பேத்தி வரை: பெண்களின் பிரத்யேக கிரிக்கெட் கிளப் உருவானது எப்படி?
சிலருக்கு கிரிக்கெட் ஆடுவதன் மூலம் தங்கள் சிரமங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தங்களுக்கு என நேரம் செலவிட முடிகிறது. அதை ஒரு கிளப் மூலம் ஒன்றிணைந்த சுமார் 300 பெண்கள் செய்கின்றனர்.
ஆண்களுக்கான விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட்டை மும்பையில் ஒன்பது வயது சிறுமி முதல் 72 வயது பாட்டி வரை விளையாடி வருகின்றனர்.
டிஜிட்டல் உத்தி ஆலோசகரான மயூரா அமர்காந்த் 2017ஆம் ஆண்டு தன் நண்பர்கள் நான்கு பேருடன் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார். அப்படித்தான் சர்வதேச ஸ்ரேஷ்ட பெண்கள் கிரிக்கெட் கிளப் உருவானது.
இதில் ஒன்பது வயது முதல் 72 வயது வரையிலான 300 பெண்கள் தற்போது விளையாடுகின்றனர்.
இவர்களில் சிலர் வழக்கறிஞர்கள், சிலர் மருத்துவர்கள், சிலர் இல்லத்தரசிகள். இவர்கள் அனைவருக்கும் கிரிக்கெட் ஆடுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார் 72 வயதான தாருலதா. அவர் தனது கணவரும் மகன்களும் ஊக்குவித்ததால் விளையாடத் தொங்கியதாகக் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



