காணொளி: ஜப்பானில் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்
காணொளி: ஜப்பானில் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்
மத்திய ஜப்பானில் உள்ள நெடுஞ்சாலையில் குறைந்தது 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் 26 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இரண்டு லாரிகள் மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தொடர் மோதலில் குறைந்தது 10 வாகனங்கள் தீப்பிடித்தன என்றும் உள்ளூர் போலீசார் கூறினர்.
விபத்து நடந்த நேரத்தில் கடும் பனிப்பொழிவு குறித்த எச்சரிக்கை அமலில் இருந்தது.
சாலையில் இருந்த உறைபனியில் லாரிகள் வழுக்கி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



