உணவும் இல்லை, உதவியும் இல்லை, யாசகம் கேட்டு வாழும் கர்ப்பிணிப் பெண்
இரண்டு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரால் பதிக்கப்பட்ட எத்தியோப்பியாவின் டீக்ரே (Tigray) பகுதியைச் சேர்ந்த மெர்பித் இன்னும் சில நாட்களில் குழந்தை பெறப்போகிறார்.
ஆனால் அவரது வீட்டில் உண்ண உணவில்லை. உணவு கொடுத்து உதவிவந்த தொண்டு நிறுவனங்களும் மனிதாபிமான உதவிகள் அனுப்புவதை நிறுத்திக்கொண்டன.
இதனால் டீக்ரேவில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

உதவிக்காக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் திருடப்படுவதாலும், வேறு இடங்களுக்கு அனுப்பபடுவதாலும் தான் உதவி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தாங்கள் அனுப்பும் உதவிப் பொருட்கள் உள்ளூர் சந்தைகளுக்கு அனுப்பப்படுவதை அறிந்து, ஐ.நா-வின் ‘உலக உணவு திட்டம்’ உதவிகள் அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. ஆனால், உதவிகளை மீண்டும் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
இந்த முறைகேடுகளுக்குக் காரணமாக இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாக அப்பகுதியின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



