சாத்தனூர் அணை: ராட்சத முதலையின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் - என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால், அணை தனது முழு கொள்ளளவான 119 அடியில் 117.40 அடி எட்டியது. இந்நிலையில் அவ்வபோது அணையின் முழு கொள்ளளவு எட்டி வருகின்றது.
அணையில் இருந்து அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வழியாக ராட்சத முதலை வெளியேறி சுற்றுலா பயணிகள் அணையைச் சுற்றிப் பார்க்கும் வழியில் சென்றது.
இது, சுற்றுலா பணிகளின் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அணை ஊழியர்கள் அந்த முதலையை மீண்டும் அணைக்குள் திருப்பி அனுப்பினர். விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



