சரியான நேரத்துக்கு மலம் கழிக்காவிட்டால் என்னாகும்?

காணொளிக் குறிப்பு, மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
சரியான நேரத்துக்கு மலம் கழிக்காவிட்டால் என்னாகும்?

ஒருவர் எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை மலம் கழிக்க வேண்டும்? இந்தக் கேள்வியை கூகுளில் தேடினால் ஒரு நாளுக்கு மூன்று முறை முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை எனப் பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

ஆனால், இதற்கு உண்மையான பதில்: உங்களுக்கு அதற்கான உந்துதல் ஏற்படும் போதெல்லாம் மலம் கழிக்க வேண்டும் என்பதுதான்.

மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது அதைச் செய்யாமல் அடக்குவதால், காலம் தாழ்த்துவதால் குடல் புற்றுநோய், செரிமான மண்டலத்தில் சிறிய மற்றும் பெரியளவிலான புடைப்புகள் ஏற்படுவது, மூலநோய், ஆசனவாயிலிருந்து நீர் வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: