காணொளி: 'தனியாரிடம் தூய்மைப் பணியா? மாநகராட்சி எதற்கு?' - சீமான் சாடல்

காணொளிக் குறிப்பு, 'தனியாரிடம் தூய்மைப் பணியா, மாநகராட்சி எதற்கு?' - சீமான்
காணொளி: 'தனியாரிடம் தூய்மைப் பணியா? மாநகராட்சி எதற்கு?' - சீமான் சாடல்

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் நுழைவாயில் அருகில் கூடாரம் அமைத்து தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து பேசிய சீமான், நகரை சுத்தமாக்கும் தூய்மை பணியை தனியார் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், எல்லாம் தனியார் மயம் எனில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்? என்றும் செய்தியாளர்களிடம் பேசும்போது கேள்வி எழுப்பினார்.