காணொளி: 'கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாகப் போகிறது' - டிரம்ப்
"நாம் கிரீன்லாந்தை எடுக்கவில்லை என்றால், ரஷ்யாவோ சீனாவோ கிரீன்லாந்தை எடுத்துக்கொள்ளும், அதை நான் நடக்க விடப்போவதில்லை." என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர்கள் உங்களுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தம் ஏதேனும் உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "ஆமாம், நிச்சயமாக. அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன். அது எளிதானது. ஆனால் எப்படியிருந்தாலும், கிரீன்லாந்து நமக்குச் சொந்தமாகப் போகிறது. அது நேட்டோவை சமரசம் செய்தால் உங்களுக்குச் சம்மதமா? நேட்டோ திறம்பட இல்லாமல் போனால்?" என்று டிரம்ப் பதிலளித்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட சமரசங்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? செய்தியாளர் மேலும் வினவ டிரம்போ, "நான் ஓரசிறந்த வேலையைச் செய்திருப்பதாக நினைக்கிறேன், நான்தான் அவர்களைக் காப்பாற்றினேன், நான்தான் அவர்களை 5 சதவீதம் செலுத்த வைத்தேன். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%.ஒரு நிமிடம். அது 2% ஆக இருந்தது, அவர்கள் செலுத்தவில்லை. இப்போது அவர்கள் 5% செலுத்துகிறார்கள். நேட்டோவைக் காப்பாற்றியவன் நான்தான். நான் அதிபராக இல்லாவிட்டால் உங்களுக்கு நேட்டோ இருந்திருக்காது." என்றார்.
அது நேட்டோவை பலவீனப்படுத்தினால் உங்களுக்குச் சம்மதமா? நேட்டோ அமைப்பு நடைமுறையில் இல்லாமல் போனால் உங்களுக்குச் சம்மதமா? என்று செய்தியாளர் அடுத்த கேள்வியை முன்வைக்க, "ஒருவேளை நான் அப்படிச் செய்தால் நேட்டோ வருத்தப்படலாம். ஒருவேளை நேட்டோ நிறைய பணத்தைச் சேமிக்கலாம். எனக்கு நேட்டோவைப் பிடிக்கும். நமக்கு நேட்டோ தேவைப்பட்டால், அவர்கள் நமக்காக இருப்பார்களா இல்லையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் இருப்பார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் நேட்டோவிற்காக நிறைய பணம் செலவழித்திருக்கிறோம்." என்று டிரம்ப் பதில் தந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



