இரான்: ஈவின் சிறையில் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் - அனுபவங்களை பகிரும் திருநங்கை

காணொளிக் குறிப்பு,
இரான்: ஈவின் சிறையில் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் - அனுபவங்களை பகிரும் திருநங்கை

இரானின், கொடூரமான, வன்முறை நிறைந்த ஈவின் சிறை தெஹ்ரானில் உள்ளது. "பொது ஒழுங்கை மீறியதற்காக" திருநங்கை ஹெல்மா இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

"என்னை நிர்வாணமாகச் சோதிக்க பெண்கள் மறுத்ததால், ஆண்களே செய்தனர். நான் பலமுறை நிர்வாணமாக்கப்பட்டேன், பிறகு 240வது வார்டுக்கு அனுப்பப்பட்டேன்" என்று தான் சிறை சென்றபோது எதிர்கொண்ட அனுபவத்தை அவர் விவரித்தார்.

அந்த சிசிடிவி காட்சிகள், கைதிகளின் நிலையை ஆவணப்படுத்திய எடாலட்-இ-அலி ஹேக்கர் குழு என்ற ஒரு ஹேக்கர் குழுவால் வெளியிடப்பட்டது.

ஆனால், ஈவின் சிறை தரமாக இருப்பதாகவும் கைதிகள் தவறாக நடத்தப்படவில்லை என்றும் கூறும் இரானிய அரசு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)