சௌதி இளவரசரின் அரசுமுறை பயணம்: ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோதி
டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டு அரங்கில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கைகுலுக்கியபோது, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இருவரின் கைகளையும் பற்றிக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மூன்று தலைவர்களும் ஒன்றாக கைகோர்த்து நிற்கும் இந்தக் காட்சி ராஜ்ஜீய ரீதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தக் காட்சியை அரசியல் விமர்சகர்கள் பல கோணங்களில் பார்க்கின்றனர்.
உண்மையில், அண்மைக் காலமாக பிரதமர் மோதிக்கும், சௌதி அரேபிய பட்டத்து இளவரசருக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கமான நட்பு உலகம் முழுவதும் நடைபெற்ற பல சந்திப்புகளின் போது தெரிய வந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் இன்னும் டெல்லியில் இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



