கால்பந்து அரையிறுதியின் 5வது நிமிடத்திலேயே அதிர்ந்த மொராக்கோ அணி

காணொளிக் குறிப்பு, கால்பந்து அரையிறுதியின் 5வது நிமிடத்திலேயே அதிர்ந்த மொராக்கோ அணி
கால்பந்து அரையிறுதியின் 5வது நிமிடத்திலேயே அதிர்ந்த மொராக்கோ அணி

பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழையவிருக்கிறது. இறுதிச்சுற்றில் பிரான்ஸ், அர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது.

மொராக்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டின் கால்பந்து அணிக்கு அட்லஸ் லயன்ஸ் என்று பெயர். அவர்களுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே, பிரான்ஸ் உடனான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் செயல்பட்டார்கள்.

இந்த ஆண்டின் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே, தனக்கு எதிராக ஆடிய எந்த அணிக்கும் ஒரு கோலை கூட விட்டுக்கொடுக்காமல் ஆடிய மொராக்கோ அணியின் எல்லைக்குள் புகுந்த தியோ ஹெர்னாண்டெஸ், அரையிறுதி ஆட்டம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பிரான்ஸ் அணிக்காக ஒரு கோலை அடித்தார்.

யசின் பூனோவின் தற்காப்பைக் கடந்து அதைச் சாத்தியமாக்கியதன் மூலம் கத்தாரில் மொராக்கோவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பெருமையை அவர் பெற்றார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: