காணொளி: காமனெயி மரண செய்தியை கண்ணீருடன் வாசித்த செய்தி வாசிப்பாளர்
காணொளி: காமனெயி மரண செய்தியை கண்ணீருடன் வாசித்த செய்தி வாசிப்பாளர்
இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி இறந்ததை அரசு ஊடகத்தில் தெரிவித்த செய்தி வாசிப்பாளர், "ஹொசைனியின் போராட்ட வாழ்க்கையை முழு வாழ்நாளும் ஓய்வின்றி தொடர்ந்து நடத்தி, (இஸ்லாமிய) பாதுகாப்பின் அசைக்க முடியாத மலையைப் போன்ற உயர்ந்த மற்றும் ஆன்மிக மனப்பாங்குடன்,
அன்பும் உறுதியும் கொண்ட கருணைமிக்க தந்தையாக இருந்து, முஸ்லிம்களின் தலைவர் மற்றும் இமாமாக இருந்த,
மிக உயர்ந்த மதத் தலைவர் அயதுல்லா சையத் அலி ஹொசைனி காமனெயி, இரான் இஸ்லாமிய குடியரசின் புனித மதிப்பை உயர்த்தும் பாதையில் செயல்பட்டு, தியாக மரணத்தின் இனிய மற்றும் தூய அருளைப் பெற்றார், மேலும் உயர்ந்த சொர்க்க ராஜீயத்துடன் இணைந்தார்." என தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



