காணொளி: அமெரிக்காவின் H-1B விசாவுக்கு மாற்று சீனாவின் K விசாவா?
அமெரிக்கா H-1B விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், சீனாவின் K-விசா பற்றி பரவலாக பேசப்படுகிறது.
சீனாவின் K-விசா என்றால் என்ன? இதன் சிறப்பம்சம் என்ன? இதனால் இந்தியர்கள் பயன் அடையக்கூடுமா? சுருக்கமாகப் பார்க்கலாம்.
H-1B விசா கட்டணம் உயர்வு
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தினார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய். இது ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
H-1B விசா இந்தியர்களுக்கு ஏன் முக்கியம்?
1990-ல் அறிமுகமான H-1B விசா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறையில் இந்தியர்களை அமெரிக்காவுக்கு ஈர்த்தது. ஹெச்1பி விசா பெறுபவர்களில் 70 சதவிகிதம் பேர் இந்தியர்கள்தான். 12 சதவிகிதத்துடம் சீனா 2ம் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவுக்கு, உலகின் சிறந்த திறமைகளை இந்த விசா பெற்றுத் தந்தது. இன்று கூகுள், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்களை இந்திய வம்சாவளி தலைவர்கள் நடத்துகின்றனர். அமெரிக்காவின் மொத்த மருத்துவர்களில் 6 சதவிகிதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
K-விசா என்றால் என்ன?
ஹெச்1 பி விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியான பின்பு சீனாவின் கே விசா குறித்து அதிகம் பேசப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக 2025 ஆகஸ்ட் மாதத்தில் புதிய K-விசாவை அறிவித்தது. இது 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட R-விசாவின் நீட்டிப்பாகும்.
சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் (Xinhua) அறிக்கையின்படி, இந்தத் திட்டம் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



