காணொளி: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த உணவு டெலிவரி ஊழியர்
காணொளி: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த உணவு டெலிவரி ஊழியர்
ஓடும் ரயிலில் இருந்து உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் கிழே விழுந்த காட்சி இது.
பெங்களூருவில் இருந்து ஒடிசாவின் புபனேஸ்வர் நோக்கி சென்றுகொண்டிருந்த பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 6ஆம் தேதி ஆந்திராவின் ஆனந்த்பூர் நிலையத்தில் நின்றபோது பயணி ஒருவர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
இதனை டெலிவரி செய்த ஊழியர் இறங்கும்போது ரயிலில் இருந்து கீழே விழுந்து பின்னர் எழுந்து சென்றார்.
இதனை வீடியோவாக எடுத்த பிஜாய் ஆனந்த் பிபிசி தமிழிடம் பேசுகையில், ரயில் 2 நிமிடங்கள் மட்டுமே அந்த நிலையத்தில் நின்றது, உணவு டெலிவரி செய்ய வந்த நபர் இறங்குவதற்கு முன்பாக ரயில் புறப்பட்டு விட்டது. உடனடியாக அவர் இறங்க முயன்றபோது கீழே விழுந்துவிட்டார்' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



