மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்டம்: முதன்முறையாக தகுதி பெற்ற அரபு நாடு
மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்டம்: முதன்முறையாக தகுதி பெற்ற அரபு நாடு
மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் இருந்து பங்கேற்றுள்ள முதல் நாடு மொரோக்கோ ஆகும்.
ஜூலை 24ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை மொரோக்கோ எதிர்கொள்கிறது.
மொரோக்கோவில் பெண்கள் கால்பந்தாட்டம் விளையாடுவது தொடர்பான பார்வை மாறியுள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்தாட்டத்திற்காக மொரோக்கா நிறைய செலவு செய்துள்ளது.
2020ல் பெண்கள் விளையாட்டுக்கான தொகை 65 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டது. இது 10 மடங்கு உயர்வு ஆகும். (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



