காணொளி: பெண்களை ஆபாசமாக சித்தரிக்க பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கிளாஸ்
காணொளி: பெண்களை ஆபாசமாக சித்தரிக்க பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கிளாஸ்
நவீன தொழில்நுட்ப கருவியான ஸ்மார்ட் கிளாஸை பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் காணொளிகளைப் பதிவு செய்யும் நபர்கள் அதனை இணையத்திலும் பதிவிட்டும் வருகின்றனர். இதனை எதிர்கொள்ளும் பெண்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.
இணையத்தில் இதைப் போன்ற நூற்றுக்கணக்கான காணொளிகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. அந்த கண்ணாடியை தயாரிக்கும் மெட்டா நிறுவனம் காணொளி பதிவு செய்வதை உணர முடியும் எனக் கூறுகிறது. ஆனால் வெளியில் தெரியாமலே காணொளி பதிவு செய்ய முடியும் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



