அமெரிக்கா - சீனா வரிக்கு வரி யுத்தம்: டிரம்ப் நடவடிக்கை பற்றி சீனா கூறுவது என்ன?
அமெரிக்கா - சீனா வரிக்கு வரி யுத்தம்: டிரம்ப் நடவடிக்கை பற்றி சீனா கூறுவது என்ன?
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பல நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்தார்.
இதில் சீனாவுக்கு 54% வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது சீனா கூடுதலாக 34% வரி விதித்தது. இந்தச் சூழலில் இந்த பகிரங்க எச்சரிக்கையை டிரம்ப் விடுத்திருக்கிறார்.
இதற்கு சீனாவும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்காவின் மிரட்டல் குணத்தை ஒரு போதும் ஏற்கமாட்டோம் எனக் கூறி உள்ள சீனாவின் வர்த்தக அமைச்சகம், வரிகளுக்கு எதிராக இறுதிவரை போராடப் போவதாகவும் சபதம் செய்துள்ளது.
மேலும், டிரம்ப் செய்வதை தவறுக்கு மேல் தவறு என்றும் சீனா கூறி உள்ளது. வரிகளுக்கான அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டும் என்றும், அமெரிக்க-சீன முரண்பாட்டை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என்றும் சீனா கூறி உள்ளது.
கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



