காணொளி: பராசக்தி படம் எப்படி இருக்கிறது? - ரசிகர்கள் கருத்து
காணொளி: பராசக்தி படம் எப்படி இருக்கிறது? - ரசிகர்கள் கருத்து
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்களில் ஒன்றாக பராசக்தி இருந்தது.
1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீலீலா போன்ற பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎப்சி) சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டபோது, அந்தப் படத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட விஷயங்களை மாற்றவும் நீக்கவும் சொல்லப்பட்டது.
இந்தப் படத்தை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் சொல்வது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



