ஏமனில் கல்வி கற்பிக்கும் சிறுவன் - குண்டுவெடிப்பில் பள்ளி சிதைந்தாலும் தளராத நம்பிக்கை
ஏமனில் கல்வி கற்பிக்கும் சிறுவன் - குண்டுவெடிப்பில் பள்ளி சிதைந்தாலும் தளராத நம்பிக்கை
இவர்தான் அகமது ரகீப். ஏமனில் ராணுவம் நிறைந்த பகுதிக்கு அருகே வசிக்கும் இவருக்கு 11 வயதாகிறது. பிறக்கும் போதே அவருக்கு பார்வைக் குறைபாடு இருந்தது.
அகமதுவை முதன்முறையாக 2021 ஜனவரியில் அல்-வஹேதா பள்ளி அருகே பார்த்தோம். இந்தப் பள்ளியை ஹௌதி படையினர் கைப்பற்றி வைத்திருந்தபோது சௌதி தலைமையிலான படையால் அது வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது.
அகமது 9 வயதில் இருந்து மற்ற மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வருகிறார். பள்ளியை சீரமைக்க அகமது கோரிவந்த நிலையில், மருத்துவர் ஒருவர் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு நிதி அளித்துள்ளார். அருகிலேயே சௌதி அரசும் ஒரு பள்ளியைக் கட்டுகிறது.
அகமதுக்கு பெரிய பெரிய கனவுகள் உள்ளன (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



