இந்தியாவுடன் 100 பில்லியன் டாலர் ஒப்பந்தம்: இந்த 4 ஐரோப்பிய நாடுகளின் திட்டம் என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியாவுடன் 100 பில்லியன் டாலர் ஒப்பந்தம்: இந்த 4 ஐரோப்பிய நாடுகளின் திட்டம் என்ன?
இந்தியாவுடன் 100 பில்லியன் டாலர் ஒப்பந்தம்: இந்த 4 ஐரோப்பிய நாடுகளின் திட்டம் என்ன?

ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு நாடுகளுடன் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட இருப்பதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

EFTA என்றழைக்கப்படும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பில் Norway, Switzerland, Iceland, (லிக்டென்ஸ்டைன்) Liechtenstein ஆகிய நாடுகள் உள்ளன. இவை தங்களுக்குள் தடையற்ற வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனும் இந்தியாவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)