சமுத்திரத்தின் பிரமாண்டத்தை ட்ரோன் மூலம் படம்பிடிக்கும் 'கடல் காதலி' – வீடியோ

காணொளிக் குறிப்பு, கடலின் பிரமாண்டத்தை ட்ரோன் மூலம் படம்பிடிக்கும் பெண் – வீடியோ
சமுத்திரத்தின் பிரமாண்டத்தை ட்ரோன் மூலம் படம்பிடிக்கும் 'கடல் காதலி' – வீடியோ

அமெரிக்காவின் நியூ யார்க்கைச் சேர்ந்த 50 வயதான ஜொவானா ஸ்டீடில் சிறுவயது முதலே கடல் குறித்தும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தார்.

இக்கனவு 2015ஆம் ஆண்டு நிறைவேறியது.

அந்த ஆண்டுதான் அவர் ஒரு ட்ரோன் கேமரா வாங்கி அதன்மூலம் கடலைப் படம்பிடிக்கத் துவங்கினார்.

அப்போதிருந்து அவர் கரைக்கு அருகில் வரும் திமிங்கலங்கள், சுறாமீன்கள், திருக்கவால்கள் ஆகியவற்றை வானிலிருந்து பட்ம்பிடித்திருக்கிறார். இவர் ட்ரோன் மூலம் எடுத்தப் படங்கள் பிரபலமடைந்து நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ் வரை சென்றுள்ளன.

பிபிசியிடம் பேசிய ஜொவானா, கரைக்கு அருகில் வரும் சிறிய மீன்களின் கூட்டங்களை வலைபோட்டுப் பிடிக்க நியூயார்க் அரசாங்கம் தடை விதித்ததாகக் கூறுகிறார். அதனால் அந்த மீன்களின் எண்ணிக்கை பெருகவும், அவற்றைச் சாப்பிட சுறா மீன்கள் மற்றும் திமிங்கலங்களும் வரத்துவங்கின, என்கிறார்.

ஜொவானா அவரது பயணத்தைப் பற்றிப் பேசுகிறார்...

கடல், டிரோன், புகைப்படம், சுறா மீன், திமிங்கலம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: