இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு - என்ன பிரச்னை? - காணொளி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு - என்ன பிரச்னை? - காணொளி
இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு - என்ன பிரச்னை? - காணொளி

காஸாவில் இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக மாலத்தீவில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இஸ்ரேலிய மக்கள் மாலத்தீவுக்குள் வருவதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. அமைச்சரவை பரிந்துரையின் பேரில் அதிபர் முய்சு இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த செயல்முறையை மேற்பார்வையிட துணைக் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி இஹ்சானும் அறிவிப்பு வெளியிட்டார்.

உள்துறை அமைச்சர் அலி இஹ்சானுடன், இஸ்லாமிய அமைச்சர், அட்டர்னி ஜெனரல், பொருளாதார அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் இந்த துணைக்குழுவில் இடம்பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிடம் கடுமை காட்டும் மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)