காணொளி: போட்டியின்போது எறியப்பட்ட 80,000 பொம்மைகள்
காணொளி: போட்டியின்போது எறியப்பட்ட 80,000 பொம்மைகள்
ஐஸ் ரிங்கில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் தூக்கி எறியப்பட்ட காட்சி இது.
அமெரிக்காவின் ஹர்ஷியில் நடந்த அமெரிக்கன் ஹாக்கி லீக் போட்டியில் ராக்ஃபோர்ட் ஐஸ் ஹாக்ஸிற்கு எதிராக ஹார்ஷி பேர்ஸ் கோலை அடித்த பிறகு பொம்மைகள் தூக்கி எறியப்பட்டன. 81,796 பொம்மைகள் வளையத்திற்குள் வந்தடைந்தன.
2001-ல் இருந்து ஆண்டுதோறும் பொம்மைகளைத் தூக்கி எறியும் நிகழ்வை ஹர்ஷே பேர்ஸ் ஹாக்கி கிளப் நடத்துகின்றது.
தூக்கி எறியப்பட்ட பொம்மைகள், 60-க்கு மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படவுள்ளன என கிளப் தெரிவித்திருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



