காணொளி: இரானில் மோதலின்போது வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகள்
காணொளி: இரானில் மோதலின்போது வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகள்
எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்
இரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் நடந்த மோதல்களின்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
தெஹ்ரானின் கிராண்ட் பஜார் பகுதியில் போராட்டக்காரர்களும் கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மனித உரிமை அமைப்பின் தகவலின்படி, இரான் முழுவதும் நடந்த போராட்டங்களில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது இரான் நாணயத்தின் மதிப்பு கடுமையாக குறைந்ததைக் கண்டித்து, டிசம்பர் 28 அன்று இந்தப் போராட்டங்கள் தொடங்கின.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



