காணொளி: இரானில் மதகுருக்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டம்

காணொளிக் குறிப்பு, காணொளி: பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இரானில் போராட்டம்
காணொளி: இரானில் மதகுருக்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் இரானின் தேசிய கொடியை கிழித்தனர்.

அதிபர் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் 2020-இல் அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரானின் முக்கிய தளபதியான ஜெனரல் காசெம் சுலைமானியின் சிலையை போராட்டக்காரர்கள் கவிழ்த்தனர்.

ஒரு மனித உரிமைகள் குழுவின்படி இந்தப் போராட்டங்கள் இரானில் உள்ள 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.

அந்த அமைப்பின்படி, இந்த அமைதியின்மையில் குறைந்தது 34 போராட்டக்காரர்களும் நான்கு பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு எதிராக இரானிய நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 28 அன்று போராட்டங்கள் தொடங்கின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு